குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று நெட்டிசன்களுக்கு நடிகை சமந்தா அறிவுரை வழங்கினார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017இல் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் இருவரும் திரைப்படங்களில் இருவரும் நடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து பிரிந்தனர்.
இதற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் வதந்திகளாக பரவியது. இருப்பினும், இருவரும் தாங்கள் பிரிவது குறித்து தெளிவாக இருந்தனர். எனினும் தொடர்ந்து சமந்தாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்தபடியே இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில் சமந்தாவின் மக்கள் தொடர்பு குழு குறித்து பதிவு வெளியிட்டிருந்தார். அதை பகிர்ந்து சமந்தா வெளியிட்ட பதிவில், “பெண்களுக்கு எதிரான வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும் எனும் மனநிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். நீங்களும் (நெட்டிசன்கள்) உங்கள் பணிகளை கவனியுங்கள். குறிப்பாக உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Rumours on girl – Must be true !!
Rumours on boy – Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
-மணிகண்டன்








