பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம், தனது அமைப்பில் மிக முக்கிய மாற்றத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிக முக்கிய டெக் நிறுவனமான ட்விட்டர், உலக அரசியலையும் சமூக நிகழ்வுகளையும் பேசும் முக்கிய தளமாக இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே இந்த தளத்திற்கு பல்வேறு ஆதரவுகளை எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. சமீபத்தில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 44 ஆயிரம் கோடிக்கு வாங்க இருப்பதாக அறிவித்தார். பின்னர் ட்விட்டர் தலத்தில் உள்ள போலி கணக்குகளின் விவரம் சரியாக தெரியும் வரை அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு சென்று கொண்டிருந்த ட்விட்டரின் கதையில் தற்போது முக்கிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது. ட்விட்டர் தொடங்கிய காலத்தில் இருந்தே முக்கிய பின்னடைவாக பேசப்பட்டு வந்த வார்த்தைகளின் அளவு கட்டுப்பாட்டை தளர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தற்போதுவரை 280 வார்த்தைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்த ட்விட்டர், முதல் முறையாக அந்த அளவை 2500க்கு மாற்றும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதை முதற்கட்டமாக அமெரிக்க, கனடா பகுதிகளின் குறிப்பிட்ட எழுத்தாளர் வட்டாரத்திற்கு மட்டும் இதை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த அளவிற்கு பயனுடையதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்







