முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

92 இன் சர்வீஸ் இடங்களை கூடுதல் சுற்று கலந்தாய்வில் சேர்க்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்புக்கான கூடுதல் சுற்று கலந்தாய்வில், தமிழ்நாடு ஒப்படைத்த 92 இன்-சர்வீஸ் இடங்களையும் சேர்க்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான பிரதான சுற்று கலந்தாய்வுகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் காலியக இருக்கும் மருத்துவ இடைங்களை நிரப்புவதற்காக கூடுதல் சுற்று (Mop Up round) நடத்த கடந்த மே 9ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அதுதொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கவியரசன் என்பவர் சார்பில் ஒரு புதிய பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2021ம் ஆண்டின்படி தமிழ்நாட்டில் காலியாக இருந்த 92 இன்-சர்வீஸ் மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த 92 இன் சர்வீஸ் மருத்துவ இடங்களையும் கூடுதல் சுற்று கலந்தாய்வில் இணைக்க வேண்டும். மேலும், இதில் ஏற்கனவே மருத்துவ இடங்களுக்கு தேர்வானவர்கள் உட்பட அனைத்து விண்ணப்பத்தாரர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சுதன்ஷூ துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மருத்துவப் படிப்பு விவகாரத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு கூடுதல் சுற்று நடத்துவது தொடர்பாக தெளிவான உத்தரவை கடந்த மே மாதம் உச்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில் ஒரு சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இருக்கும் போது, அதற்கு எதிராக தற்போது செல்ல முடியாது எனக்கூறினர்.

மேலும் கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கூடுதல் சுற்றை நடத்த வேண்டும், அதே வேளையில் ஏற்கனவே மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு வேறு இடங்களுக்கு தேர்வானவர்கள் இந்த கூடுதல் சுற்றில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும், எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.தமிழ்நாட்டால் ஒப்படைக்கப்பட்ட 92 இன் சர்வீஸ் இடங்களை கூடுதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை இடைக்காலமாக வைக்க மனுதாரருக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என தெரிவித்து கவியரசன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

Gayathri Venkatesan

இலங்கையில் தொடங்கிய படகுகள் ஏலம்: உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!

Arivazhagan CM

பாஜக தனிமனித கட்சி அல்ல: அண்ணாமலை பேட்டி

Gayathri Venkatesan