மத்திய அமைச்சரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிவிட்டர் ஏற்கெனவே பல சிக்கல்களை சந்தித்து வரக்கூடிய நிலையில் தற்போது மத்திய மத்திய தகவல்…

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டிவிட்டர் ஏற்கெனவே பல சிக்கல்களை சந்தித்து வரக்கூடிய நிலையில் தற்போது மத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்டத்தை பின்பற்றாததால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காப்புரிமை விதிகளை மீறியதால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிவிட்டரின் தன்னிச்சை செயல்பாடுகள் குறித்த என்னுடைய கருத்து டிவிட்டரை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“டிவிட்டரின் இந்த நடவடிக்கை 2021 தகவல் தொழில்நுட்ப சட்டம் விதி 4(8)ஐ மீறியுள்ளது. எனது கணக்கு முடக்கப்படுவதற்கு முன்னர் எவ்வித முன்னறிவிப்பையும் டிவிட்டர் வழங்கவில்லை.” என அமைச்சர் டிவிட்டர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.