டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பாப் ஸ்டார் பாடகி ரிஹானாவின்
கருத்தை புகழ்ந்து பதிவிடப்பட்ட ட்வீட்டுகளை, ட்விட்டர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே லைக் செய்துள்ளார்.

டெல்லியில் 72 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் போராடிவரும் பகுதிகளில் இணைய சேவையை மத்திய அரசு துண்டித்தது. அதுகுறித்த செய்தியை அமெரிக்க பாப் ஸ்டார் பாடகி ரிஹானா ‘நாம் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை?’ எனக் கேள்வியெழுப்பி ட்வீட் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரிஹானா ட்விட்டர் கணக்கை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்வதால், விவசாயிகள் போராட்டம் குறித்து, அவர் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில்
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிஹானா கருத்திற்கு இந்தியாவின் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட மத்திய அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் ரிஹானாவை தாக்கி ட்வீட் செய்திருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாத்தின் ட்வீட் பதிவை, வன்முறை தூண்டும் விதமாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. மறுபுறம் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டத்திற்கு தனது நிலைப்பாட்டை கூறிய பாடகி ரிஹானாவின் கருத்தை புகழ்ந்து வெளியிட்டிருந்த ட்விட்டுகளை, ட்விட்டர்
நிறுவனத் தலைவர் ஜாக் டோர்சே லைக் செய்துள்ளார். அந்நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.