தமிழகத்தில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் போட்டியிடுவார்கள். வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள்
- 35-மதுராந்தகம் (தனி) – K. மரகதம் குமரவேல், Ex.M.L.A.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்
- 101 – தாராபுரம் (தனி) – P.சத்தியபாமா, Ex.M.L.A., திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




