தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனையிலிருந்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், கமலி, மற்றும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன்மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உடைய வெற்றி வேட்பாளர் சத்தியபாமா. வெற்றி வாகை சூட சத்தியபாமா போட்டியிடுகிறார்.
திமுக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்ற நிலை வந்த போது தனது பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைத்துள்ளார். வாக்கு சேகரிக்க அமைச்சர்கள் வந்துள்ளார்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் விசில் சின்னம் வரலாறு படைத்தது. இடைத்தேர்தலில் வெற்றி வரலாறு படைப்பதாக அமையும். மேலும் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் வருவார். முதலமைச்சர் வாக்கு சேகரிக்க வருவார்.
அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “உப்பாறு அணைக்கு பாசன வசதி பெற தண்ணீர் விடப்படும்.
அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “நான்கு மாத தவெக அரசின் திட்டங்களை எடுத்து சொன்னாலே வெற்றி உறுதி. ஊழல் இலாத ஆட்சி கொடுப்போம் என சொன்னோம். அதை செய்து காட்டியுள்ளோம். எதிராக இருந்த கட்சிகள் நாங்கள் 108 தொகுதி ஜெயித்த பிறகு என்ன செய்தார்கள் என மக்களுக்கு தெரியும். யாரிடமும் நாங்கள் கள்ள உறவை வைத்துக் கொள்ளவில்லை.
வேட்பாளர் சத்தியபாமா,
நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்… பாண்டிச்சேரியில் வைத்து திமுக வுடன் கூட்டணி என எடப்படியார் சொன்னது உண்மை. தற்போது ஏன் அதை மறுக்கிறார் அவர். இப்போது வருந்துகிறார் என நினைக்கிறேன். மக்கள் பணிக்காகத் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.




