#Turkey | நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 6 வீரர்கள் பலி

துருக்கியில் நடுவானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். துருக்கியில் உள்ள தென்மேற்கு மாகாணமான ஈஸ்வர்ட்டா என்ற பகுதியில், ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத…

#Turkey | Military helicopters crash in mid-air - 6 soldiers killed

துருக்கியில் நடுவானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

துருக்கியில் உள்ள தென்மேற்கு மாகாணமான ஈஸ்வர்ட்டா என்ற பகுதியில், ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. அதேசமயம், மற்றொரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறப்பட்டது. தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர்.

இருப்பினும், தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்த 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்தது என்றும் அங்கு உள்ள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. அதிகாரிகள் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.