#America உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்!

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த நவ.5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட்…

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவ.5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராகிறார் ட்ரம்ப். தொடர்ந்து, அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அந்த வகையில், முன்னாள் எம்.பி. துளசி கபார்டை (வயது 43) தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” – தவெக தலைவர் விஜய்!

இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கபார்டு, தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்” என்றார்.

யார் இந்த துளசி கபார்ட்?

அமெரிக்காவின் சமோவாவில் பிறந்த துளசி கபார்ட் , ஹவாயில் தனது குடும்பத்துடன் வளர்ந்தார். இவர் 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். இவரின் பெயரை வைத்து இவர் இந்திய வம்சாவளி என பலரும் நினைக்கின்றனர். ஆனால், துளசியின் தாயார் இந்து மதத்திற்கு மாறியதால் தனது பிள்ளைகளுக்கு இந்து பெயர்களை வைத்தார். ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான துளசி கபார்டு, கடந்த 2022 -இல் அக்கட்சியிலிருந்து விலகினார்.

பின்னர் அவர் 2024-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் இணைந்தார். து குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டில் உக்ரைனில் அமெரிக்க நிதியுதவியுடன் பயோ ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக இவர் கூறியது சர்ச்சையானது. இதன் காரணமாக பலரும் அப்போது துளசி கபார்ட்டை ரஷ்ய உளவாளி என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கியமானவர். . டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.