விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தின் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் சன்டிவியில் நேரடியாக செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.







