திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அமைந்திருக்கும் சரவணபொய்கை குளம் மாசுபடுவதை தடுக்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் கட்டப்பட்ட கட்டடததை திறந்து வைத்தார்.
கடந்த 2019ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானர் மாணிக்கம் தாகூர். இவர் தற்போது தெலங்கானாவின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும், காங்கிரஸின் மக்களவை கொறடாவாகவும் உள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருடன் மாணிக்கம் தாகூரின் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி முருகன் கோயிலில் அமைந்திருக்கும் சரவணபொய்கை குளம் மாசுபடுவதை தடுக்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.44 லட்சம் ஒதுக்கீடு செய்தார் மாணிக்கம் தாகூர். தற்போது அந்த நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட குளியல் மற்றும் சலவை கூடம் கட்டடத்தை சிறுமி மூலம் திறந்து வைத்தார். அவருடன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







