முக்கியச் செய்திகள் சினிமா

அரசியல் பேசும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ பட ட்ரைலர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ட்ரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் சன்டிவியில் நேரடியாக செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் படத்தின் ஆன்லைன் வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் தளம் கைப்பற்றியது. இந்நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

7 மாதங்களுக்குப் பிறகு முழு ஊரடங்கு: இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம்!

Gayathri Venkatesan

பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் போட்டியிகிறது : டிடிவி தினகரன் !

Saravana Kumar

யார் நமக்கு பிரதிநிதியாக வர வேண்டுமென யோசித்து முடிவெடுங்கள்: ஹெச்.ராஜா!

Jeba Arul Robinson