எம்ஜிஆர் சின்னம் தற்போது நம்பியாரிடம் உள்ளது – டி.டி.வி. தினகரன் விமர்சனம்!

புரட்சிதலைவர் கண்ட இரட்டை இலை சின்னம் இன்று நம்பியார் கையில் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட…

புரட்சிதலைவர் கண்ட இரட்டை இலை சின்னம் இன்று நம்பியார் கையில் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில் இக்கட்சியின் பொதுச்செயலாளர் பேசியதாவது:

இதையும் படியுங்கள் : தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட போது விமர்சித்து ராகுல் வெளியிட்ட பதிவு – தற்போது இணையத்தில் வைரல்!

“அமமுக ஜெயலலிதா அம்மாவின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லும் இயக்கம்.  அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைத்திட வேண்டும். ஆரம்ப காலத்தில் கட்சியில் இருந்தவர்கள் சுயலாபத்திற்காக சிலர் விலை போயிருக்கலாம்.  இதில் இருந்தவர்கள் விலாசம் இல்லாமல் போய்விட்டனர்.  வேறு இயக்கம் சென்றவர்கள் செல்லாக்காசாகிவிட்டனர்.  திமுகவிற்கும்,  எடப்பாடி பழனிசாமிக்கும் வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.  அமமுக தொண்டர்கள் எந்த கட்சிக்கும் குறைந்தவர்கள் அல்ல.

வரும் நாடாளுமன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஒருவேளை போட்டியிட்டால் வெற்றி பெற்று கணக்கை தொடங்க வேண்டும். எம்ஜிஆரிடம் இருந்த சின்னம் நம்பியாரிடம் இருந்தால் எப்படி இருக்குமோ. அப்படி இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி கபளீகரம் செய்துள்ளார்.

புரட்சித் தலைவர் கண்ட வெற்றி சின்னமான இரட்டை இலையை மீட்டெடுக்க குக்கர் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். மீண்டும் தேர்தலின் நேரத்தில் சந்திப்பேன். பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திப்பேன் ”

இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.