போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.…

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதனிடையே மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply