நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து போலீசாரின் விசாரணையில், லாரி நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.