பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கன்னியாகுமரி எம்.பி.

கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் நியாய விலை கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்ற அத்தொகுதி எம்.பி விஜய்வசந்த் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர்…

கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் நியாய விலை கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்ற அத்தொகுதி எம்.பி விஜய்வசந்த் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த். இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் தச்சமலை கிராமத்தில் 13 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைப்பதற்காக தச்ச மலை சென்றார்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். எம்.பி யிடம் தங்கள் குறைகளை மக்கள் தெரிவித்தனர்.அவை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய்வசந்த் எம்.பி உறுதியளித்தார்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.