மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு பாக்கியராஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியான நிலையில், படம் கடந்த ஏப்ரல் மாத வெளியீட்டிற்காக தயாராகி வந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக திரைத்துறை சம்பந்தமான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பையடுத்து, 2020 டிசம்பர் 31 ஆம் தேதி பட போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 100% பார்வையாளர்களுக்கு திரையரங்கில் அனுமதி அறிவிப்பை தொடர்ந்து தினமும் ஒரு Promo வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று வாத்தி கம்மிங் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இன்று வெளியான ப்ரோமோ காட்சிகளில் சில வசனங்களும் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
அதில் நடிகர் விஜய் “இதுக்கு முன்னாடி வந்தவிங்களாம் இங்க உயிர் பயத்துல ஓடி போயிருக்கலாம், ஆனா என் கதையே வேற, முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” என்று பேசும் வசனம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.