100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசின் அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்கள், மதவழிபாடு, கோவில்கள, திரையரங்குகள், ஷாப்பிங் மால், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 10ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்தது.ஆனால் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரும் முதல்வர் பழனிசாமியிடம் இதே கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிருந்தனர். இந்நிலையில் திரையங்குகளில் 100% ரசிகர்களை அனுமதித்த தமிழக அரசின் உத்தரவு மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது என மத்திய சுகாதார செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது, இதனால் பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.