#CaptainMillerFirstLook : ட்ரெண்டிங்கில் ’கேப்டன் மில்லர்’ – ஃபர்ஸ்ட் லுக் எப்போது ?… லேட்டஸ்ட் அப்டேட்!

’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்பதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’…

’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்பதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். சத்யஜோதி பிலீம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

https://twitter.com/dhanushkraja/status/1672825777333878791?s=20

இந்நிலையில், விரைவில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதை தேதி குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது தனூஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.