புதுச்சேரியில் நேற்று இரவு காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாலையில்
விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆய்வு
செய்தார்.
புதுச்சேரியில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன்
கூடிய மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகரப்பகுதியில் பல்வேறு சாலையோரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.
இதேபோல் ஒரு சில இடங்களில் வேரோடு சாய்ந்தது மேலும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டசபை வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனிடையே காற்று மற்றும் மழையின் காரணமாக சாரம் பகுதியில் உள்ள போக்குவரத்து கிளை அலுவலகத்தில் வாகன பதிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான புதிய இரு சக்கர வாகனங்கள் மீது மரம் மற்றும் சுற்றுச்சுவர் விழுந்ததில் பல லட்சம் மதிப்பிலான வாகனங்களும் சேதமடைந்தது.








