பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு பாகிஸ்தானின் சித் பகுதியில் சென்ற ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் சென்று கவிழ்ந்தது. இந்நிலையில் அந்த தண்டவாளத்தில் எதிரே வந்த மற்றொரு பயணிகள் ரயில் இந்த ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.