மகாராஷ்டிராவில் திடீரென விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்

மகாராஷ்டிராவில் விமான பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார்.  மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை…

மகாராஷ்டிராவில் விமான பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை நிலத்தில் இன்று காலை 11.30 மணியளவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 வயதான பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார்.

கார்வர் ஏவியேஷன் செஸ்னா 152 விமானம் VT-ALI ஒரு தனி கிராஸ்-கன்ட்ரி விமானத்தில், பாரமதி ஏர்ஃபீல்டிற்கு 15 nm உள்நோக்கிச் செல்லும் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பயிற்சி விமானி பாவிகா ரத்தோட்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பாவிகா நல்வாய்ப்பாக இரத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மேலும் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.