ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யலாம் என்பதால் பொதுமக்களின் முதன்மை தேர்வாக ரயில் போக்குவரத்து உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ரயில் கட்டண உயர்வை இன்று ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்கிறது?

புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட்டுகள் – கட்டண உயர்வு இல்லை

Non AC (ஏசி அல்லாத ரயில்)
2ஆம் வகுப்பு

500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை
501 – 1500 கி.மீ. வரை – ரூ.5 உயர்வு
1500 – 2500 கி.மீ. வரை – ரூ.10 உயர்வு
2501 – 3000 கி.மீ. வரை – ரூ.15 உயர்வு

ஸ்லீப்பர், சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் (1கி.மீ-க்கு) – அரை பைசா உயர்வு

மெயில் மற்றும் விரைவு ரயில்கள்:

NON AC

ஸ்லீப்பர், முதல், 2ஆம் வகுப்புகளில் (1கி.மீ-க்கு) – 1 பைசா உயர்வு

AC Coach (குளிர்சாதன வசதி) – இருக்கை 

1, 2 மற்றும் 3ம் வகுப்புகள் (1 கி.மீ.-க்கு) – 2 பைசா உயர்வு

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.