கடையில் தக்காளி திருட்டை தடுக்க பவுன்சர்கள்; வியாபாரியின் வினோத செயல் வைரல்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி…

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளியை பயன்படுத்த உணவக உரிமையாளர்கள் யோசித்து
வரும் நிலையில் சாமானிய மக்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக உள்ளது.

இந்த நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார். தக்காளி விற்பனையின் போது, அங்கே வாங்க வரும் மக்கள் அதிகமாக பேரம் பேசுவதோடு சிலர் ஆவேசமாக எல்லை மீறியும் நடத்துக் கொள்கிறார்களாம். சிலர் தக்காளியை திருடி செல்வதாலும் இரண்டு பவுன்சர்களை நிறுத்து முடிவிற்கு வியாபாரி வந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.