அடுத்த 2மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை இன்று அறிவித்திருந்தது.
இன்று காலை முதலே சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் , ராயப்பேட்டை, மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி, டிடிகே சாலை, அண்ணா சாலை , நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தென் மண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







