ஓடிடி தளத்தில் வெளியான ஃபர்ஹானா இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியுள்ளன.
ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமிய கலாச்சாரத்தையும், இஸ்லாமிய பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, புகார் எழுந்தது. மேலும் இப்படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், அப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐவர்யா தத்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. திரையரங்குகளில் கவனம் ஈர்க்காத ஃபர்ஹானா, தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.








