1,390 கார்களை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம்

ஜப்பானை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா,  1,390 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 12 மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை…

ஜப்பானை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா,  1,390 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 12 மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டா நிறுவனம்அறிவித்துள்ளது. டொயோட்டா கிளான்ஸா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய இரண்டு மாடல் கார்களை வாடிக்கையாளாரிடமிருந்து டொயோட்டா திரும்ப பெறுகிறது. ஏர்பேக் வடிவமைப்பில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரச்னை ஏற்பட்டுள்ள கார்களை திரும்ப பெற்று அது சரிசெய்த பிறகு மீண்டும் வழங்கப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனமும் ஏர்பேக் வடிவமைப்பில் பிரச்னை காரணமாக 17,000 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட அல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, பலினோ, பிரிஸா, கிராண்ட் விதாரா உள்ளிட்ட மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனமும் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.