முக்கியச் செய்திகள் உலகம் வாகனம்

குழந்தைகளுக்கான பிரத்தியேக கார்கள்: எதற்காகத் தெரியுமா?

குழந்தைகளுக்கான பிரத்தியேக கார்களை தயாரிக்கும் நிறுவனமான மாச்பாக்ஸ், மின்சாரத்தில் இயங்கும் குழந்தைகளுக்கான கார்களை தயாரிக்க உள்ளது.

இந்த நிறுவனம் டெஸ்லா ரோட்ஸ்டர் கார் மாடலை முதலில் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து, நிஸான்,டொயோட்டா,பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் கார் மாடல்களை அடுத்தப்படியாக தயாரிக்க உள்ளது.

மேலும் கார்களுகளை சார்ஜ் செய்வதற்கான மின்சார நிலையத்தையும், இந்த நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் நியுரியா அலன்சோ, கூறுகையில் ‘ குழந்தைகள்தான் எதிர்காலத்தில் கார் ஓட்டுநர்கள். சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும், எண்ணத்தைக் குழந்தைகளிடம் ஊக்குவிக்க, இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். 99 % சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் இந்த கார்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் 70 வருடங்களாகக் குழந்தைகளுக்கான கார்களை தயாரித்து வருகிறது. வருடத்திற்கு 4 கோடி கார்களை இந்த நிறுவனம் உருவாக்குகிறது.

Advertisement:
SHARE

Related posts

9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்!

Nandhakumar

நாகையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Saravana

இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!