37.7 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா: சுசி கணேசனின் ‘ தில் ஹே கிரே’ தேர்வு!

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு சுசி கணேசன் இயக்கியுள்ள ”தில் ஹே கிரே’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின்“ தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது . செப்டம்பர் 12-ம் தேதி world Premier ஆக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது. உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங், அக்‌ஷய் ஓபராய், ஊர்வசி ரவ்ட்டேலா நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எம்.ரமேஷ் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில், அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும் போது “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அதிலும், படத்தின் முதல் காட்சி டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுவது, உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது“ என்று தெரிவித்தார்.இந்த படத்தின் பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக, சுசி கணேசன், இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன், நடிகை ஊர்வசி ரவ்ட்டேலா உள்ளிட்டோர் கனடா செல்கிறார்கள். மேலும் NFDC-யின் “இந்தியன் பெவிலியன்“ துவக்க விழாவிலும் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் “தில் ஹே கிரே” இத்திரைப்பட விழாவில் வியாபார ரீதியாகவும், கலைநயம் ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பாக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading