அதிக இறைச்சி நுகர்வு கொண்ட முதல் 10 நாடுகள் : இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

உலகளவில் இந்தியாவில் மிகக் குறைந்த இறைச்சி நுகர்வு இருப்பதாக சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கலாச்சார, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இறைச்சி நுகர்வு பரவலாக வேறுபடுகிறது. இந்நிலையில் ஸ்டேடிஸ்டா ஆராய்ச்சித் துறை நடத்திய ஆய்வில் லிதுவேனியா, ஜப்பான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தனிநபர் இறைச்சி நுகர்வில் உலகளவில் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது.

ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, இறைச்சி உணவுகள் அதிகம் சாப்பிடப்படும் நாடுகளில் லிதுவேனியா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகையில் 96% பேர் தொடர்ந்து அசைவ உணவையே உட்கொள்கின்றனர். அதிகமாக பன்றி, மாட்டிறைச்சி, கோழி ஆகியவை சாப்பிடப்படுகிறது.

தொடர்ந்து ஜப்பான் இரண்டாம் இடம் வகிக்கிறது. அங்கு 95% பேர் இறைச்சி உணவை உண்கின்றனர். ஜப்பானிய உணவில் மீன் மற்றும் கடல் உணவுகள் பிரதானமாக இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

அர்ஜென்டினா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகையில் 94% பேர் இறைச்சியை உட்கொள்கிறார்கள். ஸ்டீக் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற மாட்டிறைச்சி, அர்ஜென்டினா உணவு வகைகளில் முக்கியமானதாகும். கிரீஸ், ஹங்கேரி மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் 94% அதிக இறைச்சி நுகர்வு விகிதத்தைக் கொண்டுள்ளன. கிரீஸ், ஹங்கேரி மற்றும் நார்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தைப் பிடிக்கின்றன. போர்ச்சுகல் மற்றும் செக்கியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? 

ஸ்டேடிஸ்டா அறிக்கையின்படி, இறைச்சி நுகர்வில் இந்தியா உலக தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர்  கலாச்சார மற்றும் மத காரணங்களுக்காக இறைச்சியைத் தவிர்க்கின்றனர். மேலும்  இதனால் இந்தியாவில் மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இறைச்சி நுகர்வு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.