உணவு வகையில் ‘நோ தக்காளி’: விலை உயர்வால் அறிவிப்பு வெளியிட்ட மெக்டொனால்ட்ஸ்!

விலை உயர்வு காரணமாக உணவு பொருள்களில் தக்காளியை பயன்படுத்தப்போவதில்லை என துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ்  (McDonalds) தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக  உயர்ந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம்  கங்கோத்ரி…

விலை உயர்வு காரணமாக உணவு பொருள்களில் தக்காளியை பயன்படுத்தப்போவதில்லை என துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ்  (McDonalds) தெரிவித்துள்ளது. 
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக  உயர்ந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம்  கங்கோத்ரி தாம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில் ரூ. 180 முதல் 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ₹100 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி  ₹60-க்கு சலுகை விலையில் விற்கப்படுகிறது. இந்நிலையில்  துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் (McDonalds) டெல்லி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தரமான ருசியான உணவு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால்  விலை உயர்வு காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு உணவு வகைகளில் தக்காளி பயன்படுத்தப்போவதில்லை. தரமான தக்காளியை பெறும் தங்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.  வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துவதாகவும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கம் போல் நெட்டிசன்கள் கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.