தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் விலை கிடுகிடு உயர்வு!

அசானி புயல் காரணமாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கிலோ 80 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

அசானி புயல் காரணமாக, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கிலோ 80 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘நீட் தேர்வு; மேலும் காலஅவகாசம் நீட்டிப்பு’

மேலும், கடந்த மாதம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த 28 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தற்போது ஐந்து மடங்கு விலை உயர்ந்து, 1600 ரூபாய்க்கும், 15 கிலோ எடை கொண்ட டிப்பர் 800 ரூபாய் வரைக்கும் விலை போவதாகத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விலை குறைந்த சமயங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தக்காளியை வாங்கிச் செல்வதாகவும், தற்போது விலை ஏற்றத்தின் காரணமாக சில்லரை வியாபாரிகள் கூட ஒரு டிப்பர் மட்டுமே வாங்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில்தான் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது இதனால் அடுத்த சில மாதங்களுக்கு வெளிமாநில தக்காளியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும், விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் மட்டுமே இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொருத்தவரையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தே அதிக அளவிலான தக்காளி இறக்குமதி செய்யப்படுகின்றனது. அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் பெய்த தொடர் கனமழை, மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வரத்து குறைந்துள்ளது. அதேபோல, பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மழையின் காரணமாக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.