சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்த மீன் பிரியர்கள்; வியாபாரிகள் மகிழ்ச்சி!

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன்களை வாங்கி செல்வதற்காக அதிகளவில் மக்கள் வந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடி மாத ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கத்தை விட சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் மக்கள்…

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன்களை வாங்கி செல்வதற்காக அதிகளவில் மக்கள் வந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆடி மாத ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கத்தை விட சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்தால், அவற்றின் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையும், சங்கரா மீன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை கிலோ 400 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.