ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரங்களில் தக்காளி விலை 30 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்பொழுது ஒரு கிலோ தக்காளி விலை மொத்தம் விற்பனையில் 65 ரூபாய் வரை உள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் முதல் தர தக்காளி 65 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கோயம்பேடு சில்லறை சந்தையில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது.







