ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் குறித்து டாம் குரூஸ் தெரிவித்த கருத்தை அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குழு RRR சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் இந்தியாவிற்கான முதல் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியது. பாடலாசிரியர் சந்திரபோஸ், இந்த பாடல் டாம் க்ரூஸின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாக்ஷி டிவியில் பேசிய சந்திரபோஸ், ஆஸ்கர் மதிய விருந்தில் டாமைச் சந்தித்ததை வெளிப்படுத்தினார், “நான் டாம் குரூஸைச் சந்தித்தபோது, நான் அவரை அணுகி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதற்கு அவர், “ஆஹா, நான் RRR படத்தை நான் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது.
நான் நாட்டு பாடலை நேசிக்கிறேன்.’ நாடு என்ற வார்த்தையை டாம் குரூஸ் போன்ற பழம்பெரும் நடிகரிடம் இருந்து கேட்பது மகிழ்ச்சியான விஷயம். என் அவர் தெரிவித்தார். நாட்டு நாட்டுடன், குனீத் மோங்காவின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதையும் வென்றது.