நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி…

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 339 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் இருக்கும்நிலையில், இவற்றில் முதற்கட்டமாக 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

அதன்படி கட்டணம் ரூ.5லிருந்து ரூ.20தாக உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 200லிருந்து ரூ.400ஆக உயர்கிறது. வழக்கத்தைப் போல ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வர வேண்டிய கட்டண உயர்வு, தேர்தலையொட்டி இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. அதன்படி நாளை அமலுக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.