பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஜூன் 4 முதல் சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.







