”ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள்”- பிரதமர் மோடி!

இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தொடங்கப்பட உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில்…

இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தொடங்கப்பட உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், வேளாண்மை துறை முதல் விண்வெளித்துறை வரை ஸ்டார்ட் நிறுவனங்களின் எல்லை அதிகரித்து வருவதாக கூறினார்.

பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் தொடங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையேயும் அதிக ஸ்டார்ட் நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார். காணொலி காட்சி வாயிலாக நடந்த இதே நிகழ்வில் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கும் பங்கேற்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply