பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சென்னை – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 5 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால், தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு, சேப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.




