முக்கியச் செய்திகள் சினிமா

த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட் அருள்நிதி

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.தமிழரசு “மோகனா மூவீஸ்” என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார்.

கட்சியினரிடம் எளிமையாக பழகும் மு.க.தமிழரசு, ஒரு கட்டத்தில் அரசியலில் நேரடியாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரங்களில் ஈடுபடுவது மட்டுமே, அவரின் அரசியல் பங்களிப்பாக உள்ளது. மற்றபடி சினிமா தயாரிப்பை முழுநேர தொழிலாக கவனித்து வரும் நிலையில், இவரது மகனான அருள்நிதி தனது திறமையால், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பையும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் படித்த அருள்நிதி, 2010-ம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் “வம்சம்” திரைப்படத்தில் அறிமுக நாயகனாக அறிமுகம் ஆனார் அப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் வெளியிட்டார்.

சொந்த தயாரிப்பில் நடிகரானார் என்ற விமர்சனமும் ஆரம்ப காலத்தில் அருள்நிதி மீது வைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களாக தனது நடிப்பால் தனித்துவமான ஹீரோவாக வலம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டும் நடிக்கும் அவர், கதையை தேர்ந்தெடுப்பதில் கெட்டிக்காரர் என்றே கூறலாம்.

ஆம், “வம்சம்” படம் வரவேற்பை தொடர்ந்து, உதயன் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றாலும் இரட்டை வேடத்தில் கனகச்சிதமாக நடித்திருப்பார். கமல்ஹாசனின் குணா மற்றும் விக்ரம் நடித்த சேது திரைப்படங்கள் முதலில் பிளாப் என்றே கூறப்பட்டது பின் தமிழ் சினிமாவில் ‘பிளாக் பஸ்டர்’ ஆக கொண்டாடப்பட்டது. அதுபோல மெளனகுரு திரைப்படமும் ஆரம்பத்தில் பெரிதாக பேசப்படாமல் போனது. ஆனால் பின் பெரிதும் கொண்டாடப்பட்டது.

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13, ஆறாது சினம் என தொடர்ச்சியாக த்ரில்லர் படங்களில் நடித்த அருள்நிதி, தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவில் வகுத்துக் கொண்டார். எதார்த்தமான முகத்தோற்றம், இயல்பான பேச்சு என 11 வருடங்களாக இயங்கி வரும் அருள்நிதி, தற்போது மீண்டும் தேஜாவு மற்றும் டைரி என த்ரில்லர் படங்களில் நடித்து வருகிறார்.

 

கட்டுரையாளர்: ம.நிருபன் சக்கரவர்த்தி 

Advertisement:

Related posts

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Saravana Kumar

சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்

Halley karthi