முக்கியச் செய்திகள் தமிழகம்

விரைவில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்; அமைச்சர் மூர்த்தி

ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 20வது நினைவுதினம். இதையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜியின் சிலைக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகம் போற்றும் நடிகராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரும் கலைஞரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். நடிப்பின் மூலம் நல்ல கருத்துக்களை கிராமங்களுக்கு கொண்டு சென்றவர் சிவாஜி கணேசன்” என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பத்திரப்பதிவுத்துறையில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரப்பதிவுத்துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்

மேலும், ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் மேலும், எளிமையாக பத்திரப்பதிவு செய்ய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார்.

Advertisement:

Related posts

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா

Gayathri Venkatesan

பண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்

Gayathri Venkatesan

டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

Nandhakumar