நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த மாணவர்கள் இருவர், செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போருர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், விருகம்பாக்கம பகுதியை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர், நண்பர்கள் இருவருடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க பைக்கில் சென்றுள்ளனர்.
ஏரியின் 4வது மதகின் கீழே இறங்கி கால்களை நீரில் நனைத்து விளையாடிய போது, திடீரென நிலை தடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவர் அவர்களை மீட்க முயன்றும் முடியாமல் போனது. தகலவறிந்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் போராடி இருவர் உடல்களையும் மீட்டனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவகல்லூரியில் சேர்வதற்கும் காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது
இருவரும் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







