உதகையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான புட்வாலி போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
உதகை அண்ணா கலையரங்கம் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான புட்வாலி போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா,உள்ளிட்ட 12 ஆடவர் அணிகளும், 6 பெண்கள் அணியும் பங்கேற்றுள்ளன.
வாலிபால் விளையாட்டை போன்று, வெளிநாட்டில் பிரபலமான புட்வாலி போட்டியை விளையாட இளம்தலைமுறை வீரர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதாக ஒருங்கிணைப்பாளர் ராமன் ரகுநாதன் தெரிவித்தார்.







