முக்கியச் செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதா?-சீமான் கருத்து

“தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதா? இருக்கும் எல்லையை விரிவுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தீரன் சின்னமலை திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்னிபாத் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்தத்
திட்டம் ஆபத்தான திட்டம். மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படுத்தும்.
நாட்டின் பாதுகாப்பில் பொறுப்பற்ற 4 ஆண்டுகளாக இருப்பது நான்கு
ஆண்டுகளுக்கு ஒருமுறை வீரர்களை தேர்வு செய்து அப்புறம் திருப்பி அனுப்புவது
சரி இல்லை. ஓய்வூதியத் தொகை மிச்சமாகும் என்று நினைக்கிறார்கள்.

ராணுவப் பணியை 4 ஆண்டுகளில் முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு வீரருக்கு 12 லட்சம் கொடுப்பதாக கூறுகிறார்கள். அதற்கு ஏது பணம்? நாட்டின் பாதுகாப்புக்கு ஆள் எடுத்தால் பாதுகாப்புக்கு தான் ஆள் எடுக்க வேண்டும். 4 ஆண்டுகள் கழித்து வெளியில்
வந்து என்ன செய்வார்கள்? எம்ஏ, எம்பிஏ படித்தவர்கள் எல்லாம் தெருவில்
சுற்றுகிறார்கள்.

இதில் பெண்களுக்கு 20% இடம் ஒதுக்கீடு கொடுப்பதாக கூறுகிறார்கள். இந்த அக்னி பாத்திரத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் எத்தனை கிறிஸ்தவர்களை சேர்ப்பீர்கள்?

அதிமுகவில் நிலவும் பிரச்னை அவர்கள் பிரச்சினை. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அவர்களுக்குள்ள பிரச்னையைத் தீர்த்து கொள்ள வேண்டும். தமிழகத்தை இரண்டாக பிரிப்பதா? இருக்கிற எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

நாங்கள் இழந்துவிட்ட நிலத்தை மீட்க வேண்டும். இது தேவையில்லாத ஒன்று. இருக்கிற வளங்கள், நிலத்தை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைக்கு வைக்க வேண்டும்.

ஏற்கனவே நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைய மாவட்டங்களை பிரித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன திட்டங்களை நிறைவேற்றவில்லை. கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. இந்த உரிமை பாஜகவுக்கு இல்லை. 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார்கள். ஆனால் இன்று பலர் தெருவில் நிற்கிறார்கள். ரூ.15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக உறுதியளித்தார்கள்.

ஆனால் நிறைவேற்றவில்லை. அதானி, அம்பானியை உலக பணக்காரர்களாக மாற்றியதை தவிர பாஜக ஒரு சாதனையும் செய்யவில்லை. 20 மாநிலங்களுக்கு மேல் ஆளும் பாஜக இவ்வளவு பெரிய ஒன்றியம் கையில் கொடுக்கபட்டு
உள்ளன.

வளரும் நாடுகளின் பட்டியலில்  இந்தியா இல்லை. மகாராஷ்டிராவில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.130 கோடி கொடுத்ததாகவும் 5000 கோடி அளவுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பாஜக ஊழல். லஞ்சத்துக்கு எதிராக செயல்படும் இயக்கமா பாஜக. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் ஒரு தடவை கூட ஊடகத்தை சந்திக்கவில்லை.

முதலமைச்சராக ஸ்டாலின் சாதனை படைத்தால் ஏன் விளம்பரப்படுத்த வேண்டும். ம் சாதனை விளக்க கூட்டம் ஏன் நடத்த வேண்டும். 10 ஆண்டில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் கொள்ளை அடித்தது திமுகவின் சாதனை என்று சீமான் தெரிவித்தார்.

முன்னதாக, “எங்களை தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள், மாநில சுயாட்சியைத் தாருங்கள்” என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உலக கோப்பை கால்பந்து; இன்று நடைபெறும் ஆட்டங்கள்

G SaravanaKumar

தாம்பரத்தில் நின்ற தேஜஸ்; மத்திய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

Jayasheeba

ஓய்வுக்காக வெளிநாடு சென்ற விஜய்.. வைரலாகும் வீடியோ !

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading