முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் இறுதிப் போட்டி – கோப்பையைப் பகிர்ந்துகொண்ட கோவை, சேப்பாக் அணிகள்

கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதி போட்டியில், மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. போட்டி தொடங்கும் முன் கோவையில் பலத்த மழை பெய்ததன் காரணமாக 2 மணி நேரம் காலதாமதமாக 9.15 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டு 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் கோவை கிங்க்ஸ் அணி பேட்டிங்கில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஜோடி களம் இறங்கினர். சந்தீப்வாரியர் வீசிய பந்தில் சுரேஷ் குமார் 5 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன், சாய் சுதர்சன் இணைந்தார். கங்கா ஸ்ரீதர் ராஜூ 3 பவுண்டரி, 1 சிக்சர் என 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகவே அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய முகிலேஷ் 7 ரன்களுக்கு அவுட் ஆனார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து, களம் இறங்கிய ஷிஜித் சந்திரன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப நன்றாக விளையாடிய சாய் சுதர்சன் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். அதைத்தொடர்ந்து, களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ஷாருக்கான், சாய் சுதர்சனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் 22 ரன்களுக்கு அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த அபிஷேக் தன்வர் 1 ரன்னில் ஆட்டமிழக்க அதிரடி காட்டி கொண்டிருந்த சாய் சுதர்சன் 65 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு சூர்யா ரன் ஏதும் எடுக்காமலும், மணீஸ் 2 ரன்னிலும் அவுட் ஆகவே நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள்,
சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகள், சோனு யாதவ் 2 விக்கெட்டுகள்
வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சேப்பாக்
சூப்பர் கில்லீஸ் அணியினர் களம் இறங்கினர். அந்த அணியின் கேப்டன் கெளசிக்
காந்தி, ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. கெளசிக் காந்தி 1 ரன் எடுத்திருந்தபோது
அஜித் ராம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, யுதீஸ்வரன் பந்து வீச்சில் சேப்பாக் அணியின் நட்சத்திர வீரரான ஜெகதீசன் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழை தொடர்ந்து நிற்காமல் பெய்யவே டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ஓவர்கள் வீசியிருந்தால் மட்டுமே எந்த அணிக்கு கோப்பை என்று அறிவிக்க முடியும். ஆனால் மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றிலேயே முதன் முறையாக சாம்பியன் கோப்பை இரு அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது நான்கு விக்கெட் வீழ்த்திய சேப்பாக் அணி பந்து வீச்சாளர் சந்தீப் வாரியருக்கு வழங்கப்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி

Arivazhagan Chinnasamy

குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர கணிதம், வேதியியல் அவசியமில்லை – AICTE அறிவிப்பு

G SaravanaKumar

’நான் எங்க ஓய்வை அறிவிச்சேன்? ’யுனிவர்ஸ் பாஸ்’ மறுப்பு

Halley Karthik