டிஎன்பிஎல் கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி!

டிஎன்பிஎல்  23வது லீக் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20…

டிஎன்பிஎல்  23வது லீக் ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.  திருப்பூர் அணியின் வீரர்கள் சிறப்பாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.  இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 189 ரன்கள் எடுத்தது.

திருப்பூர் அணியில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்தார். மேலும் துஷார் ரெஜா 41 ரன்கள் எடுத்தார். நெல்லை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.  நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 51 ரன்களில் வெளியேறினார்.  தொடர்ந்து, ரித்திக் ஈஸ்வரன் 59 ரன்களிலும், சோனு யாதவ் 40 ரன்களில் அவுட் ஆகினர்.

இதனையடுத்து நெல்லை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.  இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் அணியில் அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.