கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டு நடைபெற்ற ரோ மற்றும் வேட் இடையிலான முக்கியமான வழக்கில் தீர்ப்பளித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், …

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1973ம் ஆண்டு நடைபெற்ற ரோ மற்றும் வேட் இடையிலான முக்கியமான வழக்கில் தீர்ப்பளித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம்,  கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறியது. அரசியல்சாசனம் பெண்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருப்பதாகவும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பு எதிரொலியாக அமெரிக்க மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற முடியாமல் இருந்தது. இந்நிலையில், 50 ஆண்டு கால ரோ vs வேட் வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், ரோ மற்றும் வேட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக கூறியது. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பையடுத்து  கருக்கலைப்பை தடை செய்ய சட்டம் கொண்டு வரும் உரிமை அமெரிக்க மாகாண அரசுகளுக்கு கிடைத்துள்ளன. இந்த உரிமையை பயன்படுத்தி அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை உடனடியாக இயற்றியுள்ளன. மேலும் பல மாகாணங்களும் இந்த சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.