புதுச்சேரியை பாஜகவிடமிருந்து காப்பாற்றவேண்டும்: திருமாவளவன்

பாஜக ஆட்சி அமைத்தால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அங்காளை ஆதரித்து…

பாஜக ஆட்சி அமைத்தால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அங்காளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவை தோளிலே சுமக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு அமைத்தால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்றும் வாக்காளர்களை திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.