தமிழகத்தில் ‘குடும்ப பிரைவேட் லிமிடெட்’ என்னும் குடும்ப அரசியல் கட்சிகளை இனி மக்கள் புறக்கணிப்பார்கள் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய உள்துறை இணை அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக மேலிட பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி , மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவினைத்தொடர்ந்து செய்தியார்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் முருகன், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு பாஜக முக்கியத் தலைவர்கள் வருகின்றனர் என்றும் பத்து நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசார கூட்டத்தை தலைவர் நட்டா தொடங்கி வைத்துள்ளார் எனவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட சென்னை, கோவை இரு இடங்களிலும் நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடத்த இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் பிரதமர் சந்திப்பில் பத்து நிமிடம் என்ன பேசினார்கள் என தெரியவில்லை எனக் கூறிய முருகன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாக்கு சதவீதத்தை பாதிக்காது என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது. மாநில அரசுகளை வரிகளை குறைக்க அறிவுறுத்தி இருக்கின்றோம் என்றார்.
மேலும் பாஜக பூரணமதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை பரீசிலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியில் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏ ராஜினாமா செய்கின்றனர் என்றும் கிரண்பேடி நீக்கம் குறித்த கேள்விற்கு பாண்டிசேரி விசயத்தில் நான் பேசுவது நன்றாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முருகன், கோவை பாஜகவின் கோட்டை என்றும் தேர்தல் பிரசாரத்தை நமது கோட்டையிலிருந்து துவங்க உள்ளோம் என்றும் மேற்கு மண்டலம் பாஜகவின் கோட்டையாக இருப்பதாகவும், ஆதலால் கொங்கு மண்டலத்திருந்து அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமர்த்திருப்பார்கள் எனவும் பேசினார்.
மேலும் பிரதமர் மோடியின் கோவை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய முருகன் இந்த நிகழ்ச்சி கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்குக்கும் சென்று சேர வேண்டும் என்றும் நமது எண்ணம், லட்சம், நோக்கம் எல்லாம் தமிழக சட்டசபையில் தாமரை வீற்றிர செய்வது என்றும் அதுவரை நமக்கு ஓய்வு கிடையாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிசன் ரெட்டி, கோவை பாஜகவுடன் உணர்வு பூர்வமான தொடர்புடையது அதனால் தான் கோவையில் பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்குகிறார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே பாஜக நிறைய இணைந்துள்ளார்.
இன்னும் நிறைய இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்த கிசன் ரெட்டி தென்னிந்தியாவில் பாஜக அதிக்கவனம் செலுத்தி வருவதாகவும் பூத் லெவல் பாஜக நிர்வாகிகள் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களை திரண்ட பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு வீடுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி என்னென நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என்பதை பரப்புரை செய்ய வேண்டும் எனக் கூறிய கிசன் ரெட்டி இனி இந்தியாவில் காங்கிரஷுக்கு எதிர்காலம் இல்லை என்றும் அதேபோன்று குடும்ப ரீதியான அரசிலுக்கு இனி இந்தியாவில் எதிர்காலம் இல்லை எனவும் மற்ற மாநிலங்களில் குடும்ப கட்சிகள் புறகணிக்கபடுவதுபோல் தமிழகத்திலும் ‘குடும்ப பிரைவேட் லிமிடெட்’ என்னும் குடும்ப கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.