முக்கியச் செய்திகள் தமிழகம்

வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போதுள்ள சில தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கை வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரம்.

 • அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர்.
 • மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி.
 • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்.
 • உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம்.
 • அரசின் அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. இதர அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.
 • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம்.
 • தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
 • மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
 • மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி.
 • ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட இயங்கலாம்.
 • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.
 • வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.
 • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
 • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
 • அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி.
 • பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாக பணிகளுக்கு மட்டும் அனுமதி.
 • திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
 • விளையாட்டு பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் செயல்படக் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
 • வாடகை டேக்ஸிகள், ஆட்டோக்களின் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு

G SaravanaKumar

மாநிலங்களவை தேர்தல் எவ்வாறு நடைபெறும் ?

G SaravanaKumar

மதுரை மாநகராட்சியின் மேயராகுகிறார் இந்திராணி

Arivazhagan Chinnasamy